June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன

1 min read

Modern ‘drones’ arrived in India from Israel

30/11/2021

இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன

டிரான்கள்

லடாக் எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதன்பின் இந்திய ராணுவம் லடாக் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.

இருந்தாலும் சீன ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவல் சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.

அவசரகால அடிப்படையில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதனால் இஸ்ரேலியிடம் இருந்து நவீன வகை ஹெரான் டிரோன்களை வாங்க முடிவு செய்தது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹெரான் டிரோன் இந்தியா வந்தடைவதில் காலதாமதம் ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *