இந்தியாவில் மேலும் 9,216 பேருக்கு கொரோனா; 391 பேர் சாவு
1 min read
Corona for another 9,216 in India; 391 deaths
3/12/2021
இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. அதாவது 9 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 391 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இன்று காலை பாதிப்பான 9 ஆயிரத்து 765ஐ விட சற்று குறைவாகும்.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 216 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
391 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.