June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று

1 min read

Omicron infection in one more person in India

4.12.2021
குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான்

தென் ஆப்ரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலை தொடர்பாளர்கள், இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில், ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது மாதிரிகளை, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனை குஜராத் மாநில சுகாதாரத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *