June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

வெள்ள தடுப்பு பணிகள்: மு.க.ஸ்டாலின் ஆய்வு

1 min read

Flood prevention works: MK Stalin’s study

7.12.2021
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டிடிகே நகரில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

வெள்ள தடுப்பு பணிகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்ததால் வரதராஜபுரம் பி.டி.சி.குடியிருப்பு பகுதிகள் மகாலட்சுமி நகர், இரும்புலியூர் டி.டி.கே.நகர், வன்னியன்குளம், முடிச்சூர் அமுதம் நகர் பகுதிகளில் ஏரித்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மழைநீரை வடிய வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் எந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்த நிலையில், என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் இரும்புலியூர் டி.டி.கே. நகர், வன்னியன்குளம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்றுவரும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு முடிச்சூர் ஊராட்சியில் அமுதம் நகர் பகுதியில் நடைபெற்ற வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் டி.டி.சி.குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் மகாலட்சுமி நகர் மேம்பாலம் பகுதியில் நீர்வளத்துறையால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *