வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பிய 109 பேர் எங்கே?
1 min read
Where are the 109 people who returned to Mumbai from abroad?
ஒமைக்ரான் பீதியால்
வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பிய 109 பேர் எங்கே?
7.12.2021
ஒமைக்ரான் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பிய 109 பேர் எங்கே என்று தெரியவில்லைர. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸ்
ஒமைக்ரான் வைரஸ் மராட்டிய மாநிலத்தை மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளது. அங்கு ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் இருந்து 295 பேர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். இவர்களில் 109 பேர் கடந்த சில நாட்களில் இந்தியா திரும்பி உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை.
தேடும் பணி
இவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மாயமாகி விட்டனர். இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் முகவரியை வைத்து அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
அவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்பது தெரியவில்லை. இதனால் தானே மாவட்ட மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.