June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 7,774 பேருக்கு கொரோனா; 306 பேர் சாவு

1 min read

Corona for a further 7,774 in India; 306 deaths

12/12/2021
இந்தியாவில் மேலும் 7,774 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 306 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் அவ்வப்போது கொரோனா தொற்று ஏறுமுகமும், இறங்குமுகமும் கண்டு வருகிறது. ஆனாலும் சின்னதாய் ஒரு ஆறுதல், தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் அடங்கி உள்ளது.
அதன்படி இந்தியாவில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 8,464 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு நாளில் 306 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,46,90,510 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 92 ஆயிரத்து 281 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,41,22,795 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,75,434 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 89,56,784 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,32,93,84,230 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.37 சதவீதமாக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27 சதவீதமாக குறைந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *