தெலங்கானா மாநிலத்தில் 6 நக்சலைட்கள் சுட்டுக் கொலை
1 min read
6 Naxalites shot dead in Telangana
27/12/2021
தெலங்கானா மாநிலத்தில் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் இணைந்து நக்ஸல் தீவிரவாதிகள் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 6 நக்ஸலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நக்சலைட்டுகள்
தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் நக்ஸலைட் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு மாநில போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் படையினரும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அங்குள்ள நிலைமை கண்காணிக்கப்படுவதாக பத்ராத்ரி காவல்துறை அதிகாரி சுனில்தத் தெரிவித்தார்.
சத்தீடீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இரண்டு வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீஸாரை குறி வைத்து அந்த வெடிபொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.