தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்வு; பொங்கல் போனசும் அறிவிப்பு
1 min read
Increase in internal pay for Tamil Nadu government employees; Pongal Bonus Announcement
28.12.2021
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயத்தப்பட்டுஉள்ளது. பொங்கல் போனசையும் அறிவித்துள்ளது.
அகவிலைப்படி
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்சும் வழங்கப்படுகிறது. சி, டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ. 3000 , ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 போனஸ், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ. 1000 போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.169.56 கோடி இழப்பு ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் இரண்டிற்கும் ரூ.8894 கோடிய தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.