June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 9,195 பேருக்கு கொரோனா; 302 பேர் சாவு

1 min read

Corona for 9,195 newcomers in India; 302 deaths

29.12.2021

இந்தியாவில் புதிதாக 9,195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருநாளில் 302 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வந்தாலும்கூட, கொரோனா பரவல் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது. நேற்று முன்தினம் 6,531 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 6,358 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் 2,474 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 195 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,48,08,886 ஆக அதிகரித்துள்ளது.

302 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,80,592 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,347 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,51,292 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 77,002 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 143.15 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,67,612 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 67,52,46,143 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *