புத்தாண்டு அன்று புதுச்சேரியில் மது விற்பனைக்கு தடை
1 min read
Liquor sale banned in Pondicherry on New Year
29.12.2021
புதுச்சேரியில் டிசம்பர் 31 இரவு 10 முதல் 1 மணி வரை மதுபானம் விற்க, பொது இடங்களில் அருந்த தடை விதித்தது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு
புதுச்சேரியில் டிசம்பர் 31 இரவு 10 முதல் 1 மணி வரை மதுபானம் விற்க, பொது இடங்களில் அருந்த தடை விதித்தது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டல் மற்றும் விடுதிகளில் கூட இரவு 10 முதல் 1 மணி வரை மதுபானம் விற்பனை கூடாது என்றும் 2 முறை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்ப்ட்டு உள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது.
50 சதவீதம் பேர் மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படும். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்காள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம் என தெரிவித்தது. இதனால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்
ஐகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளரும், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்தலைவருமான ஜெகநாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அண்டை மாநிலமான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரியில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 1 மணி வரை மதுபானம் விற்கக்கூடாது என உத்தரவிட்டது. இரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.