தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு
1 min read
Omicron exposure is lower in those who have been vaccinated
30.12.2021
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் குறைந்த பாதிப்பே ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான்
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் தற்போதுவரை 961 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 320 பேர் குணமடைந்துள்ளனர். ஒமைக்ரான் பரவலை தடுப்பூசி கட்டுப்படுத்துமா என பல்வேறு கருத்துகள் வெளியாகிவரும் சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்றை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பில் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-
தடுப்பூசி
ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வந்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது. கோவிட் தடுப்பூசியால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரான் மட்டுமின்றி பிற நோய்களையும் எதிர்க்கிறது. ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக டி செல் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. இது கடுமையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். தடுப்பூசி போடாதவர்கள், தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.