இந்தியாவில் தினசரி கொரோனா 33,750 பேராக அதிகரிப்பு; 123 பேர் சாவு
1 min read
Daily corona increase to 33,750 in India; 123 deaths
3/1/2022-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவுகிறது. ஒரே நாளில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 123 பேர் இறந்தனர்.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 33,750 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தகவர்களின் மொத்த எண்ணிக்கை 3,48,89,132 லிருந்து 3,49,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 10,846 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 3,42,84,561 லிருந்து 3,42,95,407 ஆக உயர்ந்துள்ளது.
123 பேர் சாவு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 123 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,81,770லிருந்து 4,81,893 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,582 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்றில் இருந்து 639 பேர் குணமடைந்த நிலையில் 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான்
அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள் விவரம்:-