இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகி்ஸ்தானியர் சுட்டுக்கொலை
1 min read
Pakistani shot dead as they try to infiltrate into Indian territory
காஷ்மீரில்
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகி்ஸ்தானியர் சுட்டுக்கொலை
3.1.2022
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
பயங்கரவாதி
காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு மாவட்டம் அரினா செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டனர்.
சுட்டுக்கொலை
இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினர் அந்த நபரை எச்சரித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் முன்னேறி வந்ததால் அவரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொனறனர். இதனால், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்டவர் பயங்கரவாதியா? என்பது குறித்து எல்லைப்பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.