August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா மாத்திரை விலை 35 ரூபாய்

1 min read

Corona tablet price in India is 35 rupees

4.1.2022
இந்தியாவில் கொரோனா மாத்திரை விலை 35 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா மாத்திரை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்யவுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த மாத்திரையின் விலை 35 ரூபாய் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

5 நாட்கள்

மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். அதிகம் கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத்திரையின் விலை 35 ரூபாய் ஆகும். 5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும். 40 மாத்திரைகளின் விலை 1,400 ரூபாய் ஆகும். இரண்டு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் இந்த மாத்திரைகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *