June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜார்க்கண்டில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 16 பேர் பலி

1 min read

Bus-lorry head-on collision in Jharkhand; 16 people were killed

6.1.2022

ஜார்க்கண்ட் மாநிலம் கோவிந்த்பூர் – சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் பலினார்கள்.

விபத்து

ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து தேவ்கர் மாவட்டத்தை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பகூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் – சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 14 பயணிகள், லாரி டிரைவர், கிளீனர் ஆகிய 16 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர்

விபத்தில் சிக்கிய லாரியானது எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்றுள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் வெடித்திருந்தால், உயிரிழப்பு அதிகரித்திருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *