June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது

1 min read

The number of omega-3 infections in India has exceeded 3,000

7.1.2022

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான்

ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மேகாலயா, சண்டிகார், காஷ்மீர், அந்தமான் நிகோபார், அசாம், புதுச்சேரி, பஞ்சாப், இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர் என 26 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் தனது காலடி தடத்தை பதித்து, 2,630 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், ஒமைக்ரானின் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் 5 மாநிலங்கள் ஆகும்.

3007 பேராக உயர்வு

இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மராட்டியம்- 876
டெல்லி- 465
கர்நாடகம்- 333
ராஜஸ்தான்- 291
கேரளா- 284
குஜராத்- 204
தமிழ்நாடு- 121
அரியானா- 114
தெலுங்கானா- 107
ஒடிசா- 60
உத்தரபிரதேசம்- 31
ஆந்திரா- 28
மேற்கு வங்காளம்- 27
கோவா- 19
அசாம்- 9
மத்திய பிரதேசம்- 9
உத்தரகாண்டு- 8
மேகாலயா- 4
சண்டிகார் 3
காஷ்மீர் 3
புதுச்சேரி- 2
இமாச்சல பிரதேசம்-1
லடாக்-1

குணம் அடைந்தவர்கள்

மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 876 பேரில் இதுவரை 381 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 465 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *