August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு; பாரதியார் யார் என்று தெரியாதாம்

1 min read

Tamil Nadu decorative vehicle rejected at Republic Day parade; I do not know who Bharatiyar is

17/1/2022
குடியரசு தின அணிவகுப்பில் வ.உ.சி., ,வேலுநாச்சியார், பாரதியார் சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தாங்கிய மேற்கு வங்க ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *