கொரோனா பரவல்: 25-ந் தேதி 9 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை
1 min read
Corona outbreak: Mansuk Montvia consults with 9 state health ministers on the 25th
24.1.2022
கொரோனா பரவல் காரணமாக வரும் 25-ந் தேதி 9 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஜம்மு காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், டெல்லி, லடாக், உத்தரப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய ஆகிய 9 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி மன்சுக் மாண்ட்வியா வரும் 25-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் இந்த 9 மாநிலங்களின் கொரோனா பரவல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.