நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும்
1 min read
The urban local elections will be held on February 19 in a single phase
26.1.2022
21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு;
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
பிப்ரவரி 19-ந் தேதி
பிப்ரவரி 19- ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை – பிப்ரவரி 22
ஜனவரி 28- வேட்பு மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: பிப் 4
வேட்புமனு பரிசீலனை – பிப் 5
வேட்பு மனு திரும்பபெற கடைசி நாள்: பிப்.7