May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

டாக்டராக வயது ஒரு தடையில்லை: 61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்

1 min read

Age is not a barrier to becoming a doctor: a teacher who has passed the NEET exam at the age of 61

28.1.2022
தர்மபுரியை சேர்ந்த 61 வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றிப்பெற்று, மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வு

மருத்துவப் படிப்பில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 71 எம்.பி.பி.எஸ்., – இரண்டு பி.டி.எஸ்., என, 73 இடங்கள் நிரம்பியுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, இன்று (ஜன.,28) கவுன்சிலிங் தொடங்கியது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்

இன்றும் நாளையும் சேர்த்து 436 எம்.பி.பி.எஸ்., – 97 பி.டி.எஸ்., என, 533 இடங்களுக்கு, கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதில் 61 வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியர் ஒருவரும் பங்கேற்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் என்பவர், ஓய்வுப்பெற்றாலும், அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி அளித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றியும் பெற்று அசத்தியுள்ளார். இதனையடுத்து அவர் இன்று நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிவபிரகாசம் 249வது இடத்தில் இருப்பதால், அவருக்கு மருத்துவ இடம் எளிதாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.