May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவு; உயிரிழப்பு அதிகம்

1 min read

Daily corona exposure is low in India; The death toll is high

30/1/2–022
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது. அதே நேரம் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 21-ந் தேதி ஒரு நாள் தொற்று பாதிப்பு 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 அளவுக்கு அதிகரித்தது. அதன்பின்னர் இது தொடர்ந்து குறைந்து வருகிறது.
தற்போது மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, ஒடிசா, அரியானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு தட்டையாக (அதிகரிக்காமல்) உள்ளது.

அந்த வகையில் கடந்த 27-ந் தேதி 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அது நேற்று முன்தினம் 28-ந் தேதி 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 ஆக குறைந்தது. நேற்று (29-ந் தேதி) இது மேலும் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 ஆக பதிவானது.

இந்த நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 281- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 893- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 784- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.