June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை மாநகராட்சியில் 2 திருநங்கைகள் போட்டி

1 min read

2 transgender competition in Chennai Corporation

2.1.2022

சென்னை மாநகராட்சி 76-வது வார்டில் பா.ஜனதா சார்பில் திருநங்கை ரதி போட்டியிடுகிறார். 112-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக திருநங்கை ஜெயதேவி போட்டியிடுகிறார்.

திருநங்கை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து வருகிறார்.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி 76-வது வார்டு வேட்பாளராக திருநங்கை ராஜா என்கிற ரதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா கட்சியில் வடசென்னை மாவட்ட கலை கலாச்சார பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.

ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் அவர் வசித்து வருகிறார். ரதி (ராஜம்மாள்) ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி இருக்கிறார்.

அ.தி.மு.க.

சென்னை மாநகராட்சி 112-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக திருநங்கை ஜெயதேவி போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி ஆயிரம் விளக்கு 112-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக திருநங்கை ஜெயதேவி போட்டியிடுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *