May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 83,876 கொரோனா; 895 பேர் சாவு

1 min read

83,876 new corona in India; 895 deaths

7.2.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. ஒரு நாளில் புதிதாக 83,876 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 895 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 895 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதுவரை 5,02,874 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதித்த 11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,99,054 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 169.63 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரட்தில் 14,70,053 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.