August 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு

1 min read

Chance of heavy rain in Kerala for next 7 days

13.2.2022
கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் மழை

கேரளா முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் தென்மாவட்டங்களில் திடீர் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது.

கேரளாவில் திடீரென பெய்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் வங்க கடலின் மேல் பகுதியில் உருவான மேகக்கூட்டத்தில் காற்றின் ஈரபதம் அதிகமாக இருக்கிறது.

அதிகமான ஈரபதம் கொண்ட மேகங்கள் கேரளா நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கேரளா முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு யைம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதே நேரம் வடகேரள பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *