April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

பிறந்த நாளையொட்டி மொரார்ஜி தேசாய்க்கு பிரதமர் மோடி புகழாரம்

1 min read

Prime Minister Modi praises Morarji Desai

28.2.2022
தேச கட்டமைப்பில் நினைவுகூரும் வகையில் பங்காற்றியவர் என்ற முறையில் பரவலாக மதிக்கப்படுபவர் என முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

மொரார்ஜி தேசாய்

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1896ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந் தேதி பிறந்தார். அவருக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிப்ரவரி 29ந் தேதி பிறந்த நாள் வரும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதியுடன் முடிவடையும் என்பதால் இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

புகழாரம்

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நம்முடைய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் நம் நாட்டை கட்டமைக்கும் பணியில் நினைவுகூரும் வகையில் பங்காற்றியதற்காக பரவலாக மதிக்கப்படுபவர். இந்தியாவை வளம் நிறைந்த நாடாக ஆக்குவதற்கான விரிவான முயற்சிகளை மேற்கொண்டவர். பொதுவாழ்வில் நன்னெறியை என்றும் வலியுறுத்தியவர் என்று தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.