இந்தியாவில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 7,554 newcomers in India
2.3.30222
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று சற்று உயர்ந்தது. ஒரு நாளில் புதிதாக 7,554 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
கொரோனா 3-வது அலை
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடர்ந்து வீ்ழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று சற்று கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 13 இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் 6,915 ஆக குறைந்தது.
இந்நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,554 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,38,599 ஆக அதிகரித்துள்ளது.
223 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,14,023 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,123 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,38,673 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 85,680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 177.79 கோடி டோஸ் (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,55,862பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7,84,059 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 76,91,67,052 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.