June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா; 2 பேர் சாவு

1 min read

Corona for 158 people in Tamil Nadu today; 2 deaths

7.3.2022
தமிழகத்தில் இன்று 158 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 2 பேர் இறந்துள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு 200-க்கு கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 171- ஆக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 512 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் தூத்துக்குடியில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று 43 ஆயிரத்து 382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 62 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 7-ந் தேதி) 56 ஆக குறைந்துள்ளது.
தென்காசியில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *