June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 4,184 பேருக்கு கொரோனா; 104 பேர் சாவு

1 min read

Corona for 4,184 newcomers in India; 104 deaths

10.3.2022
இந்தியாவில் கொரோனா குறைந்து வருகிறது. ஒருநாளில் புதிதாக 4,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 4,575 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,184 ஆக குறைந்தது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது.
தொடர்ச்சியாக 31வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக ஒரு நாளில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 488 ஆக குறைந்தது.

நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 6 ஆயிரத்து 554 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது.

104 பேர் சாவு

நாடு முழுவதும் கொரோனாவால் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தம் இதுவரை 1,79,53,95,649 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 23 ஆயிரத்து 329 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *