August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

உ.பி. கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் வெற்றி

1 min read

Yogi Adityanath wins in Gorakhpur constituency

10.3.2022

உ.பி. சட்டசபை தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார்.

யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில், உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவர், கோரக்பூர் நகர தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லாவை விட 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *