June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 3,614 பேருக்கு கொரோனா; 89 பேர் சாவு

1 min read

Corona for 3,614 newcomers in India; 89 deaths

13/2/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,614 பேராக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா 3-வது அலை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை 4 ஆயிரத்து 575 பேரும், வியாழக்கிழமை 4 ஆயிரத்து 184 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. 4 ஆயிரத்து 194 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 3,614 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 614 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,87,875 ஆக அதிகரித்துள்ளது.

89 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,803 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 5,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,31,513 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 40,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,79,91,57,486 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,18,511 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 8,21,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 77,77,15,932 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *