தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 52 people in Tamil Nadu today
21.30.2022
தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 96 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 20 ம் தேதி) 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 21 ம் தேதி) பாதிப்பு 52 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 31,568 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,442 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 23 பேர் ஆண்கள், 29 பேர் பெண்கள். இன்று 96 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,841 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று( மார்ச் 20 ம் தேதி) 22 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 21 ம் தேதி) 19 ஆக குறைந்துள்ளது.