இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,581 ஆக அதிகரிப்பு
1 min read
Daily corona exposure in India increased to 1,581
22.3.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,581 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் 3-வது அலை முடிவுக்கு வந்ததால் தொற்றின் தினசரி பாதிப்பு மிகவும் வேகமாக குறைந்து வந்தது. நேற்று வரை தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா தொற்று இன்று சற்று உயர்ந்துள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் 1761 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1,549 ஆக குறைந்தது.
இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து 1,581 ஆக உள்ளது. நேற்றை விட இன்று 32 பேர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது.
33 பேர் சாவு
மேலும் பலி எண்ணிக்கையும் நேற்றை விட இன்று அதிகரித்துள்ளது. நேற்று 31 பேர் பலியான நிலையில் இன்று 33 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,741 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 70 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 913 ஆக குறைந்துள்ளது. இது நேற்றை விட 1,193 குறைவாகும்.
நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இதுவரை 181 கோடியே 56 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.