June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரி மக்களவையில் தி.மு.க. அமளி- வெளிநடப்பு

1 min read

DMK Amali walks out of Lok Sabha demanding withdrawal of Tamil Nadu Governor

4.4.2022
மக்களவையில் ஒன்றிய அரசே, மத்திய அரசே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு என தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். பின்னர். அவர்கள் மக்களவையில் தி.மு.க. எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

டி.ஆர்.பாலு நோட்டீஸ்

மக்களவை பொதுச்செயலாளருக்கு தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் ஒன்றை அளித்தார். அதில், தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பிரிவு 200-ன் படி தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார். இதனால் அரசியலைமைப்பு சாசன சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. மேலும் 3 மசோதாக்களை அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தாமதம் செய்கிறார். இதுகுறித்து உள்துறை மந்திரி விளக்கம் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கோஷம்

இதற்கிடையே, மக்களவை நேற்று கூடியதும், தமிழக ஆளுநரை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு என தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க. அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தி.மு.க. எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *