May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பயில்வானிடம் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Hundreds / thousands of comedy story stuck with the learner

4.4.2022
கண்ணாயிரம் வடநாட்டில் காணாமல்போன கழுதைகளை கண்டுபிடிக்க போலீசாருடன் சென்றார். கழுதைகளை கண்டுபிடித்தபின் அதன் சொந்தகாரர்கள் கண்ணாயிரம் மேல் சந்தேகப்பட்டு அரிவாளுடன் துரத்தினர். கனவில் இந்த காட்சிகளைகண்டு கட்டிலிருந்து கீழேவிழுந்த கண்ணாயிரத்தை அவரது மனைவி தூக்கி னார்.என்ன ஆச்ச என்று அவர்கேட்டபோது கண்ணாயிரம் கெட்டகனவு கண்டேன் என்றார்.
அவரிடம் என்ன கனவு கண்டிங்க என்று அவர்கேட்டார்.அதற்கு கண்ணாயிரம் காணாமல்போன கழுதையைதேடி போலீசாருடன் வடநாடு சென்றதையும் போஸ்டர்ஒட்டுறதுக்கு பயன்படும் பசையைவைத்து கழுதையை மீட்டதையும் சொன்னார். பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தபோது கழுதைக்கு சொந்தகாரர்கள் அரிவாளுடன் தன்னைவிரட்டிவந்தார்கள் .உயிர் தப்பியதே பெரிசு என்று கண்ணாயிரம் கண்ணீர் மல்க கூறினார்.
அதற்கு அவர் மனைவி…ஏங்க…நீங்க கண்டது பகல்கனவு. அது பலிக்காது.உங்களை வெட்டவருவது மாதிரி உண்மையிலே நடக்காது. நீங்க பயப்படாதீங்க…வடநாட்டு கழுதைகளை கண்டுபிடிக்க நீங்க போங்க என்றார்.
கண்ணாயிரம் கோபத்துடன்…பூங்கொடி..கனவிலே என்னை அப்படி விரட்டுனாங்களே…உண்மையிலேன்னா எப்படி விரட்டுவாங்க.. அம்மாடி நம்மால முடியாது…ஆளைவிடு என்றார். பூங்கொடி உடனே..ஏங்க கோபப்படாதீங்க…உங்களை கழுதைக்கு சொந்தக்காரர்கள் அரிவாளால்வெட்ட வரும் போது போலீஸ்காரர்கள் வந்து தடுக்கலையா என்று கேட்டார். அதற்கு அவர்…அதை ஏன் கேட்கிற..அவங்க பைனார்குலரை எடுத்து கழுதைவருதா என்பதை தூரத்திலிருந்து பார்த்துக்கிட்டிருந்தாங்க..என்றார். உடனே பூங்கொடி பைனார்குலர் எல்லாம் எதற்கு…அதைவச்சு எப்படி கழுதையைபிடிக்கமுடியும் என்று கேட்டார்.அதற்கு அவர்…தொலை நோக்குடன் துப்பறியணுமுன்னா…பைனார்குலர் வேணுமாம். நானும் அந்த கள்ளநோட்டுவாலிபரை கண்டுபிடிக்க பைனார்குலர் வாங்கணும் என்றார்.
பூங்கொடி அவரிடம் ஏங்க பைனார்குலரை கனவிலேதான பாத்திங்க…கனவிலே வாங்கிக்கிங்க…என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு முகம் சுருங்கியது. அதைபார்த்த பூங்கொடி…ஏங்க கோபமா…மர்ம நாவல் படிச்சிங்கின்னா..நிறைய யோசனைவரும்…கள்ள நோட்டுவாலிபரைபிடிச்சிடலாம் என்று யோசனை சொன்னார்.

கண்ணாயிரம்..ம்..ம்..சரி என்று தலையாட்டினார்.ஆனாலும் பைனார்குலர்வாங்க வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்.கண்ணாயிரம் சிந்தனையில் இருப்பதைபார்த்த பூங்கொடி..மெல்ல..ஏங்க…பேசாம சாப்பிட்டுவிட்டு படுங்க..நாளைக்கு சிலம்ப பயிற்சி இருக்கு …மறந்திடாதீங்க…என்று சொன்னார்.
கண்ணாயிரம் சோர்வாக சரி…என்றவர் சிலம்பாட்டம் சொல்லித்தரும் பயில்வானை நினைத்து பயத்தில் முணங்கினார்.ஏங்க…கனவு கண்டதுக்கெல்லாம் பயப்படலாமா…தைரியமா இருங்க என்று சாப்பாடு கொடுத்தார். கண்ணாயிரம் மெல்ல மெல்ல சாப்பிட்டார். சிறிது நேரம் கழித்து படுத்து தூங்கினார்.
காலைவிடிந்தது. கண்ணாயிரம் கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தார்.ஏங்க சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகுங்க…பயில்வான் வந்துருவாரு என்று அதட்டினார்.
கண்ணாயிரம் குளியல் அறைக்குள் புகுந்து ஒரு இந்திபாட்டைபாடியவாறு குளித்தார்.என்னங்க…நீங்க தமிழே அரைகுறை…இதிலே இந்திபாட்டுவேற வாழுதா என்று பூங்கொடி அதட்டினார். கண்ணாயிரம் உடனே…வடநாட்டுக்குபோனா பயன்படுமே என்று இரண்டு இந்திபாடலை படிச்சிவச்சேன்..பாட்டு நல்லா இருக்கா…என்று கேட்டார். பூங்கொடி பதிலுக்கு நீங்க இந்த இந்திபாடலைபாடினா கழுதை உடனே ஓடிவந்திடும்…என்றார்.கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சிதாங்கமுடியவில்லை. இதுவும் நல்ல யோசனைதான்…இந்திபாட்டை நல்லாபாடிபழகணும் என்று நினைத்தார்.சீக்கிரம் குளிங்க என்று பூங்கொடி அதட்டினார்.கண்ணாயிரம் வேகமாக குளித்துவிட்டுவெளியே வந்தார். துண்டால் உடம்பை துடைத்துவிட்டு வேட்டி கட்டினார். பின்னர்பயில்வான் அடித்தால் வலிதெரியாமல் இருக்க இரண்டு சட்டை மாட்டினார். அப்போதும் திருப்தி இல்லாததால் மூன்றாவதாக ஒருசட்டை மாட்டினார்.அந்த சட்டை கட்டையாக இருந்ததால் ஏற்கனவே போட்டிருந்த இரண்டுசட்டைகளும் கொஞ்சம்வெளியே தெரிந்தன.

இந்த நேரத்தில் வீட்டு முன் சிலம்பு கம்புடன் பயில்வான் வந்து நின்றார்.சிலம்பு கம்பை பலவாறு சுற்றி அதிரவைத்தார்.அந்த சத்தத்தை கேட்டதுமே கண்ணாயிரத்துக்கு வயிற்றில் புளியைகரைத்தது.வெளியே போகலாமா வேண்டாமா என்று இருமனதாக அங்கும் இங்குமாக நடந்
தார்.கண்ணாயிரம் வெளியே போகாமல் சுற்றிவருவதைபார்த்த பூங்கொடி ஏங்க….பயில்வான் வந்துட்டாரு.சீக்கிரம் வெளியேபோய் அவர்காலில் விழுந்து ஆசிவாங்குங்க…என்று சொன்னார்.

கண்ணாயிரம் மூன்றுசட்டைபோட்டிருக்கும் தைரியத்தில்வெளியேவந்தார்.சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்த பயில்வான் காலில்விழுந்து ஆசிவாங்கலாமுன்னு அவரை சுற்றிசுற்றிவந்தார்.அவர்காலில்விழப்போவார்.ஆனால் பயில்வான் சிலம்புசுற்றுவதை நிறுத்தாமல் வேறுபக்கத்துக்கு போனார்.இதைபார்த்த கண்ணாயிரம் கடுப்பானார். என்ன நான் காலில்விழுந்து ஆசிர்வாதம்வாங்கலாமுன்னு நினைச்சா இவர் இடம்கொடுக்கமாட்டேங்கிறாரே..அவரா சுத்தி நிக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாமுன்னு நினைத்தார்.
அப்போது பயில்வான் சிலம்பு சுற்றுவதை நிறுத்திவிட்டு கண்ணாயிரத்தைபார்த்து..சிலம்பம் கத்துக்கிறதுக்கு முன்னாடி குருவிடம் ஆசிவாங்கணுமுன்னு தெரியுமா என்று கேட்டார்.
தெரியும் என்று சொல்லிய கண்ணாயிரம் பயில்வானின் காலைதொட்டுகும்பிட குனிந்தவர் தடுமாறி கீழேவிழுந்தார். இதைபார்த்த பயில்வான் உடனே கண்ணாயிரம் முதுகில் ஓங்கி ஒரு அடித்து தூக்கினார்.மூன்று சட்டைபோட்டிருந்ததால் அடிவலிக்கவில்லை.தனது சாமர்த்தியத்தை நினைத்து கண்ணாயிரம் சிரித்தபடி எழுந்து நின்றார். மூன்று சட்டைபோட்டிருக்கும் ரகசியத்தை அவர்போட்டிருக்கும் சட்டைகளே காட்டிக்கொடுத்தன. இதை அறிந்த பயில்வான் மெல்ல கண்ணாயிரத்தை பார்த்து கண்ணாயிரம் பாடத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டார்.கண்ணாயிரம் தலையை அசைத்தார்.உடனே பயில்வான் சிரித்தபடி முதலில் உடற்பயிற்சி…அப்புறம் சிலம்ப பயிற்சி…இப்போ நீங்க முதலில் என்னபண்ணுறீங்கன்னா..என்னைமாதிரி வேட்டியை தார்பாய்ச்சி கட்டுங்க.. அப்புறம் மேல போட்டிருக்கிற மூணு சட்டையையும் கழற்றிவிட்டு என்னைமாதிரி வெறும் உடம்புடன் நில்லுங்க..என்றார். எதற்கு சட்டையை கழற்றணும்.அதைகழற்றாமலே உடற்பயிற்சி செய்யலாமே என்றார் கண்ணாயிரம்.அதைபயில்வான் கேட்கவில்லை.ஏங்க உடற்பயிற்சி செய்யும்போது உடம்புல வியர்க்கும்..அப்போ சட்டைபோட்டிருந்தா சரியா இருக்காது என்றார் பயில்வான்.அதை கேட்டதும் கண்ணாயிரம்…ஏங்க ஒரேஒரு சட்டைமட்டும் போட்டுக்கலாமா என்று கேட்டார்.பயில்வானோ கோபத்துடன் ஒருசட்டையும் போடக்கூடாது என்று சொன்னார். கண்ணாயிரம் அழுதுகொண்டே முதல்சட்டையை கழற்றினார்.
( தொடரும்
)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.