June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 24 people in Tamil Nadu today

5.4.2022
தமிழகத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,955 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,14,674ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 256 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *