June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 57 people in Tamil Nadu today

22.4.2022
தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. நேற்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு 50- ஐ தாண்டி அதிரவைத்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

57 பேர்

தமிழகத்தில் மேலும் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் தொற்ற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 37- பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. சென்னையில் நேற்று 21 ஆக ஒருநாள் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256-ல் இருந்து 286- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 27- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *