July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு

1 min read

Corona affects 42 people in Tamil Nadu today

19.5.2022
தமிழகத்தில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழகத்தில் இன்று 15,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 27 பேரும், பெண்கள் 15 பேரும் உள்பட 42 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று 41 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 34 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 322 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *