May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

மாயமான கண்ணாயிரம் வீட்டு சாவி/ நகைச்சுவை கதை

1 min read

The house key of the magical Kannayiram/ Story by Thabasukumar

30.5.2022
கண்ணாயிரம் அவர் மனைவி பூங்கொடி ஆகியோர் குற்றாலம் செல்ல தீவிரமாக இருந்தார்கள்.சுற்றுலா பஸ்வந்ததும் கண்ணாயிரம் ஒடிப்போய் டிரைவர் சீட்டுக்கு பின்னால் துண்டுபோட்டு இடம்பிடித்தார். அவர் மனைவி டிரெங்பெட்டியையும் சூட்கேசையும் தூக்கிவந்து பஸ்சின்மேல்பகுதியில்பைகள் வைக்கும் இடத்தில் திணித்துவைத்தார் .அதுபாதி அளவு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.அது எப்போது வேண்டுமானாலும் தலையில்விழலாம் என்று கண்ணாயிரத்தை மற்றவர்கள் எச்சரித்துவிட்டு சென்றார்கள் .கண்ணாயிரம் அதைகேட்டு பதட்டத்திலே இருந்தார்.
இந்த நேரத்தில் இறைச்சிக்கடைக்காரர் சுடிதார் சுதாவை பஸ்சில் ஏற்றுவதற்காக மோட்டார்சைக்கிளில் வேகமாக அழைத்துவந்தார் .அவர் ஏற்கனவே கன்னத்தில் அறைந்ததால் பயத்தில் இருந்த கண்ணாயிரம் பதட்டமானார். இறைச்சிக்கடைக்காரர் ஒருபேக்குடன் பஸ்சில் ஏறினார். அவருடன் சுடிதார்சுதா கைகளை ஆட்டியபடி மேலே ஏறிவந்தார். செண்ட்மணம் மூக்கை துளைத்தது. கூடுதல் மேக்கப்.. அழகி போட்டிக்கு போகிற பெண்போல இருந்தது. காற்றில் இளம் கூந்தல் பறக்க…ஹீல்ஸ் செருப்பு டக் டக் என்று ஒலிக்க.. அவள் பஸ்சில் நடந்தாள்.
கண்ணாயிரம் ஓரக்கண்ணால் பார்த்தார் .இறைச்சிக்கடைக்காரர் ஏற்கனவே சூரிகத்தியைபோட்டு சீட்டு பிடித்திருந்தார் .அந்த கத்தியை எடுத்து மடக்கியபடி சுதா. இங்கேவா..பஸ்சிலே நடுவிலே ஓரத்தில் சீட்டுபிடிச்சி போட்டிருக்கிறேன்..உட்கார்..நல்லா காற்றுவரும் என்றார்.
சுதா ஒயிலாக நடந்தபடி அந்த சீட்டில் அமர்ந்தார். இறைச்சிக்கடைக்காரர் பெரிய பேக்கை சுதா கையில் கொடுத்துவிட்டு…ம் பத்திரமா போயிட்டுவா…ஒவ்வொரு இடத்துக்கும் போனவுடன் போன் பண்ணு..எப்பவும் லைனிலே இரு..பஸ்சிலே சார்ஜர் போட்டுக்கு…என்று அடுக்கிக்கொண்டே போனார். சுதா…ம்..போன் பண்ணுறன்…நீங்க போயிட்டுவாங்க…என்று சொன்னபோது இறைச்சிக்கடைக்காரர் சட்டை பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து …செலவுக்கு வச்சிக்கோ…என்று கொடுத்தார். சுதா அதை வாங்கி..பேக்கில் உள்ள மணிபர்சில்வைத்தார். இறைச்சிகடைக்காரர் சுற்றி இருந்தவர்களை ஒரு முறை முறைத்துவிட்டு பஸ்சைவிட்டு இறங்க போனார். பஸ்சின் முன்பக்கத்தில் கண்ணாயிரம் இருப்பதை பார்த்து வழிவிடுங்க என்றபடி கண்ணாயிரம் முதுகில் ஒருதட்டு தட்டிவிட்டு கீழே இறங்கினார்.
நல்லவேளை தடியன்…பஸ்சிலே கூடவரலை…வந்தா நம்மபாடு அவ்வளவுதான் .என்று முதுகை தடவிகொண்டார்.
அதைபார்த்த…பூங்கொடி…யாருங்க அவரு..நானே உங்கள இப்படி அடிச்சதில்ல…அவரு உங்களை இப்படி முதுகிலே அடிச்சிட்டுபோறாரு.. நான் அவரை நாலுவார்த்தை கேட்காம விடமாட்டேன் என்று ஆவேசமாக எழ…கண்ணாயிரம் பாய்ந்து பூங்கொடியை தோழைபிடித்து அமுக்கினார்.
அது ஒண்ணும் இல்லம்மா…அவரு நம்ம பிரண்டு…சும்மா தமாசுக்கு…அப்பப்போ…முதுகிலே தட்டுவாரு…ஆமா..முதுகிலே தட்டுவாரு…நீ அதை பெரிசா எடுத்துக்காத…என்றார் கண்ணாயிரம்.
அதில் பூங்கொடி சமாதானம் அடையவில்லை. ஏங்க…மெல்ல தட்டுனாருங்கிறீங்க…சொத்து சொத்துன்னுல்லா கேட்டிருச்சி..நான் அடிக்கும்போது கூட இவ்வளவு சத்தம் வந்தது இல்லையே என்று மடக்க கண்ணாயிரம் பதில் சொல்லமுடியாமல் விழித்தார்.
பின்னர் பூங்கொடியிடம்…அதெல்லாம் ஒண்ணும் இல்ல அம்மா…அவர் இறைச்சிக்கடைக்காரர்..கைகொஞ்சம் மரத்துபோய் இருக்கும்..அதான் அவர் தட்டியபோது சவுண்டு கொஞ்சம் சாஸ்தியா கேட்டுச்சு..மற்றபடி ஒண்ணும் வலிக்கல என்று கூறு..பூங்கொடி ….அவரை முறைத்து பார்த்தார். ஏய்..உண்மையிலே வலிக்கல…வலிச்சா சொல்லமாட்டேனா….என்றார்.
ஏங்க…இவ்வளவு பேர் இருக்கும்போது உங்களை மட்டும் ஏன் தட்டுனாரு..நீங்க எதையோ மறைக்கிறீய..சொல்லுங்க என்று அதட்டினார்.
கண்ணாயிரம் அழாத குறையாக..உண்மையிலே வலிக்கல…நீ அதை விட்டுடு..என்று கெஞ்சினார்.சரி..சரி..அந்தசின்ன கைத்தடியை எங்கே.. அதை எடுத்து கையிலே வச்சிக்கிட்டு மிரட்டுற மாதிரி பாருங்க…அப்பத்தான் உங்க மேல அவங்களுக்கு பயம் வரும்.இன்னாங்க..குறுந்தடியை கையிலேபிடிங்க..கருப்பு கண்ணாடியை முகத்திலே மாட்டிக்குங்க..பயந்தமாதிரி முகத்தை வையாதீங்க…சரியா என்றார்.
கண்ணாயிரம் சரி என்றபடி முகத்தில் கருப்பு கண்ணாடியை மாட்டிக்கொண்டு கையில் குறுந்தடியைபிடித்தபடி சீட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்தார்.
பயில்வான்..பஸ்சில் எல்லாரும் சரியாக உட்கார்ந்துவிட்டார்களா என்று நோட்டமிட்டார்…நாற்பது சீட்டுதான் புள்ளாயிருக்கு..மீதி சீட்டு காலியாக கிடக்கு…ம்..எல்லாரும் வந்தாச்சு என்றவர் பஸ்சுக்கு கீழே நின்ற டிரைவரிடம் ..அண்ணாச்சி எல்லோரும் வந்தாச்சி சரியா எட்டேகால் மணிக்கு பஸ்சை சாட் பண்ணுங்க…என்றார்.
அவர் …சிகரெட்டை ஊதியபடி. ம்…என்றார். மாற்று டிரைவர் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

பஸ்சில்ஒரே..களபுளா களபுளான்னு சத்தமாக இருந்தது…மணி எட்டே காலை நெருங்கியது.பயில்வான் பஸ்சுக்கு சூடம் சாம்பிராணி காட்டி ரோட்டில் தேங்காயை உடைத்தார். பின்னர் பஸ்சின் முன்பகுதியில் பெரிய மாலையை மாட்டினார்.பின்னர் டிரைவரும் மாற்று டிரைவரும் பஸ்சில் ஏறினார்கள்.டிரைவர்..சீட்டில் அமர்ந்தார்.சாமி படத்தை வணங்கிவிட்டு பஸ்சை ஸ்டாட் செய்தார்.எலுமிச்சம் பழங்களை நசுக்கியபடி..டயர்கள் மெல்ல உருண்டன. கண்ணாயிரம் மகிழ்ச்சியாக..புன்னகைத்தார். பூங்கொடி செல்போன்கள் வைத்திருந்த பையை திறந்து கண்ணாயிரத்திடம் சின்னசைஸ் செல்போனை கொடுத்தார். அடுத்து ஆண்டிராய்டு செல்போனை எடுத்து தன்னுடைய அப்பாவுக்கு தகவல் சொல்ல எண்களை அழுத்தினார்.அப்போது கண்ணாயிரம் எதேச்சையாக..பூங்கொடி…கதவை எல்லாம்..நல்லா பூட்டினியா..திருட்டுபயம் ஜாஸ்தி என்க…பூங்கொடிக்கு தூக்கிவாரிப்போட்டது.ஏங்க…வீட்டையே பூட்டலங்க…மறந்துட்டேன் ..கொஞ்சம் பஸ்சை நிறுத்துங்க என்று கத்தினார்.புறப்பட்ட பஸ் நின்றது.பூங்கொடி பஸ்சைவிட்டு இறங்கி…வீட்டை நோக்கி ஓடினார். இறைச்சிக்கடைக்காரர் முறைத்துபார்த்தபடி பஸ்சுக்கு கீழே நின்று கொண்டிருந்தார்.

வீட்டை பூட்டாம..வர்ர ஆளைப்பாரு…என்று கண்ணாயிரத்தின் மனைவியை பார்த்து கடுப்பாக பேசினார். சுடிதார் சுதா அவரைப்பார்த்து நீங்க போயிட்டுவாங்க…நான் பத்திரமா போயிட்டு வர்ரேன் என்றார். இறைச்சிக்கடைக்காரர்…இல்லம்மா…பஸ்புறப்பட்ட உடன் நான் போறன்..கடை மெதுவா திறந்தா போதும் …ஊருலபாதிபேரு குற்றாலத்துக்கு போறாங்க..இறைச்சிவாங்கவும் அதிகஆள் இருக்காது என்றார்.
வீட்டுக்கு ஓடிபோன பூங்கொடி…நல்லவேளை நினைவு வந்துச்சு…இல்லன்னா என்ன ஆயிருக்கும் என்று நினைத்தார். ஸ்டவ்வை ஆப் பண்ணுனனான்னு தெரியலையே..காலையிலே ஒரே பதட்டம்..எல்லாமே மறந்துபோச்சு என்றபடி வீட்டுக்குள் போனார்.நினைத்தமாதிரியே…ஸடவ்வை ஆப்பண்ணவில்லை…இப்படி மறப்பேனா என்றவாறு ஸ்டவ்வை ஆப் செய்தார்.இடி மின்னல் மழைவந்தாலும் வரலாம்..எதற்கும் டிவி கனைக்சனை பிடுங்கிவிட்டார்.உள்ளறையில் பேன் ஓடிக்கொண்டிருந்தது…அட…இதைவேற ஆப்பண்ணாம போயிருக்காரு…என்ன மனுசன் அவர் என்றபடி பேன்சுவிட்சை ஆப் செய்தார்.உள்கதவு..பின்கதவு எல்லாம் நல்லா பூட்டியிருக்கா என்று செக்பண்ணினார்.பின்னர் மனதிருப்தியானவுடன் முன்பக்க வீட்டு சாவியை தேடினார். காணவில்லை…எங்கே வச்சேன்…தெரியலையே..என்று திணறினார். நேரம் ஆனதால் பஸ்டிரைவர் ஆர்ன் அடித்தார்….கண்ணாயிரம்…என்ன வீட்டுக்கு போன பூங்கொடி யை எங்கே காணம் என்றபடி தேடிவந்தார். என்ன பூங்கொடி கதவை பூட்டிட்டு வரலைய்யா என்று கேட்க…பூங்கொடி..ஏங்க வீட்டுசாவியை எங்கேவச்சேன்னு தெரியலங்க என்றார். கண்ணாயிரம்..ம்..பதட்டப்படாம…யோசித்துபாரு…வழக்கமா வைக்கிற இடத்திலே தேடு என்றார். அவர் தேடினார்.கிடைக்கவில்லை.காலையிலே சாவியை எடுத்தியா யோசித்துபாரு என்றார் கண்ணாயிரம்.
உடனே பூங்கொடி நிதானமாக யோசித்தார்..உங்க மினரல்வாட்டர் கேன் கைத்தடி கண்ணாடி எடுக்கும்போது வழக்கமா சாவி தொங்கவிடுற இடத்திலிருந்து சாவியை எடுத்தேன்…அப்புறம் பூட்டுறதுக்காக சாவியை ….ம் நினைவு வந்துட்டு கதவிலே சாவி இருக்கான்னு பாருங்க என்றார்.கண்ணாயிரம் ஓடிபோய் கதவின் முன்பக்கம் பார்த்தார்.சாவி இருந்தது.சாவி இருக்கு…சாவி இருக்கு என்று கத்தினார். பூங்கொடி மகிழ்ச்சியில்…ஆ..கடவுளுக்கு நன்றி.கதவை பூட்டணுமுன்னு சாவியை வச்சவா.பூட்டாம மறந்து தொலைச்சிட்டேன் என்றபடி கதவை பூட்டி சாவியை கையில் எடுத்தார். கண்ணாயிரம்..சாவியை நான்தான் கண்டுபிடிச்சேன் என்று பெருமிதத்துடன் துள்ளிக்குதித்தார்.
இறைச்சிக்கடைக்காரர் பற்களை கடித்தபடி அவர்களை நோக்கிவந்துகொண்டிருந்தார்.

-வே.லழசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.