முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக நேரில் ஆய்வு
1 min readInterview with First-Minister MK Stalin on the 2nd day
31/5/2022
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முதல் அமைச்சர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தூர்வாரும் பணிகள் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி மூலம் 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று முன்தினம் திருச்சி வந்தார்.
2-வது நாளாக நேரில் ஆய்வு
மயிலாடுதுறையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடபாதி கொக்கேரி கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்த அவர் அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று 2-வது நாளாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.காலை 9.10 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து அங்க வைக்கப்பட்டு இருந்த சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியையும், வேளாண் துறை சார்பில் குறுவை சாகுபடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதைநெல், பூச்சிக்கொல்லி மருந்து, நாற்றங்கால் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த தொழில் நுட்ப கண்காட்சியையும் பார்வையிட்டார். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ..வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, மெய்யநாதன், மாவட்ட கலெக்டர்கள் அருண்தம்புராஜ்(நாகை), லலிதா(மயிலாடுதுறை) காயத்ரி கிருஷ்ணன்(திருவாரூர்) உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.