June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 2,745 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2,745 newcomers in India

1.6.2022
இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக பதிவாகியுள்ளது. ஒரு நாளில் புதிதாக 2,745 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 338-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரைகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 236 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 193 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரத்து 807 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது,
மேற்கண்ட தவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *