June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 139 people in Tamil Nadu today

1.6.2022
தமிழகத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98-ல் இருந்து 139-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 44-ல் இருந்து 59-ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 46-ல் இருந்து 58-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிக்சை பெறுவோர் எண்ணிக்கை 542-ல் இருந்து 629-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 52 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *