June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6,000 அபராதம்

1 min read

Lalu Prasad Yadav fined Rs 6,000 for misconduct

9.6.2022
தோ்தல் நடத்தை விதிமீறல் தொடரப்பட்ட வழக்கில்
லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தேர்தல் விதி

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, லாலு பிரசாத் யாதவ் பாலாமு மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று மேற்கொண்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் மேதினிநகரில் உள்ள ஹெலிபேடுக்கு பதிலாக கார்வா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், அவர் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லாலு பிரசாத் ஆஜரானார்.
அப்போது அவர், தான் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதை அவா் ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த அபராதத்தை லாலு செலுத்தியதைத் தொடா்ந்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *