June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பூஸ்டர் தடுப்பூசி போட்டும் அமெரிக்க சுகாதார மந்திரிக்கு மீண்டும் கொரோனா

1 min read

Corona back to US Secretary of Health for booster vaccination

15.6.2022
அமெரிக்க சுகாதார மந்திரிக்கு ஒரு மாதத்துக்குள் 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மந்திரி

அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் மந்திரியாக இருந்து வருபவர் சேவியர் பெசெரா. 64 வயதான இவர், கடந்த மாத மத்தியில் ஜெர்மனிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். பூஸ்டர் உள்பட கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களை செலுத்திக்கொண்டபோதும் அவரை வைரஸ் தாக்கியது.
அதை தொடர்ந்து, தன்னை தானை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்து பணிக்கு திரும்பினார். இந்த நிலையில் தற்போது சேவியர் பெசெராவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் காலை வழக்கமான பரிசோதனை செய்தபோது தொற்று பாதிப்பு உறுதியானதாகவும், அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *