November 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கல்லூரணி முப்புடாதி அம்மன் திருவிழாவில் சுமங்கலி பூஜை

1 min read

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.008906; highlight: 1; motionR: 65537; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0041,0.0022; brp_del_sen: 0.1000,0.1000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:11:02 19:08:53; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8388608;cct_value: 0;AI_Scene: (200, 2);aec_lux: 230.47226;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65537;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 42;zeissColor: bright;

Sumangali Puja at the Muppudathi Amman Festival in Kallurani

3.11.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி முப்புடாதி அம்மன் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சுமங்கலி பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சமூக ஆர்வலர் வைரசாமி சேலைகளை பரிசாக வழங்கினார்.

பாவூர்;சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாளில் இரவு அம்மன் கண் திறப்பும், தொடர்ந்து குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 2வது நாளான நேற்று (திங்கள்கிழமை) இரவு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் சாந்தி ரவி பட்டாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார். கல்லூரணி ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான வைரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் சேலைகள் பரிசாக வழங்கினார். தொடர்ந்து ராஜா-ராhணி ஆட்டம் நடைபெற்றது.
நிறைவு நாளான இன்று (செவ்வாய்கிழமை) மதியம் வில்லிசை. உச்சி கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், ஆயிரங்கண் பானை ஊர்வலம் ஆகியவை நடைபெற்று விழா நிறைவு பெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் முருகேசன், மகேஸ்வரன், விஜயன், சண்முகபிரபு, தனசிங், தங்கவேல், லிங்கவேல், மதியழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *