தமிழகத்தில் இன்று 2,722 பேருக்கு கொரோனா
1 min read
Today 2,722 people in Tamil Nadu have Corona
8.7.2022
தமிழகத்தில் இன்று மேலும் 2,722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் நேற்றைய பாதிப்பை விட இன்று கொரோனா தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை:
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் புதிதாக 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,413 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் 18,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று 939 ஆக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 474, திருவள்ளூர் 191, காஞ்சிபுரம் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.