முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா
1 min read
Corona for Prime Minister M.K. Stalin
12/7/2022
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சிகள் ரத்து
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார். அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 3 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவரது உடலில் கொரோனா பாதிப்பின் அளவும் குறைவாகவே இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.