May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கலங்க வைத்த கழுதை

1 min read

Kannayiram donkey / Story by Thabasukumar

14/7/2022

கண்ணாயிரம் பண்ருட்டி பஸ்நிலையத்தில் இறங்கி அவசரமாக பாத்ரூம் போகும் முன் ஐம்பது ரூபாயை கொடுத்துவிட்டு செல்ல மீதி சில்லறையை வாங்க பத்துநிமிடம் கழித்துவர குத்தகைத்காரர் அங்கே இல்லாமல் போக திடுக்கிட்டு நின்று அழுது ரகளை செய்தார். சில்லறை மாற்ற சென்ற குத்தகைக்காரர் வேகமாக ஓடிவர கண்ணாயிரம் பாத்ரூம் போனதுபோக மீதி நாப்பத்தைந்து ரூபா கேட்டு அடம்பிடிக்க குத்தகைக்காரர் ஏப்பா..அழாத..கொஞ்சம் பொறு என்று சில்லறை நோட்டாக கொடுக்க..அதை பத்திரமா எண்ணிய கண்ணாயிரம் அதில் பத்து ரூபாய் நோட்டு கிழிந்துபோயிருக்க…இது செல்லாது…இது செல்லாது என்று கத்த குத்தகைக்காரர் கோபத்தில் அந்த பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு மஞ்சளாக இருந்த பெரிய பத்து ரூபாய் காசை கொடுத்தார்.
அதை வாங்கிய கண்ணாயிரம்..ம்…சத்தம்போட்டாத்தான் கதை நடக்குது….கிழிஞ்ச நோட்டை நம்ம தலலயிலே கட்டப்பாக்கிறாங்க…நடக்குமா..ஏற்கனவே கள்ளநோட்டை வாங்கிட்டு நான்படுறபாடு…பத்து ரூபா காசு நல்லாத்தான் இருக்கு…என்றபடி கண்ணாயிரம் பாத்ரூமைவிட்டு புறப்பட்டார். வெற்றிபுன்னகையுடன் சுற்றுலா பஸ்சை நோக்கி விரைந்தார்.வயிறுகாலியானதால் கொஞ்சம் பசித்தாலும் கண்ணாயிரம் அதை பொருட்படுத்தாமல் விசில் அடித்தபடி வேகமாக நடந்தார். கண்ணாயிரத்தை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்க காந்தாபிரியாணி புகழ் எல்லோருக்கும் தெரிய கண்ணாயிரத்தை பார்த்ததும் எல்லோரும் கொல் என்று சிரித்தனர்.
பூங்கொடி அதை பார்த்து..ஏங்க பாத்ரூம்போயிட்டுவர்றதுக்கு இவ்வளவு நேரமா..மானத்தை வாங்குறிய..நல்லாபோனியளா…என்று முகத்தில் இடித்தார்.
கண்ணாயிரம்..ம்..ஆச்சு.. ஆச்சு நல்லா ஆச்சு..பிரியா இருக்கேன்…ஒண்ணும் பிராப்ளம் இல்ல..என்று சொல்லியபடி பஸ்சில் ஏறினார். பூங்கொடியும்…ம்..சீக்கிரம்ஏறுங்க…எவ்வளவு நேரம் காத்திருக்கிறது…ஏறுங்க…என்று கண்ணாயிரத்தை தள்ள..ஏய்..தள்ளாத கீழேவிழுந்துட்டா என்ன பண்ணுவே…என்று கண்ணாயிரம் அதட்ட..பூங்கொடியோ..கீழேவிழுந்தா இங்கேவிட்டுட்டு போயிருவன் என்க கண்ணாயிரத்துக்கு பக் என்றது.
பேசாம அவரது சீட்டில்போய் உட்கார..பூங்கொடியோ..இடம் கொடுங்க…தள்ளுங்க என்றபடி அடுத்து. அமர்ந்தார். கண்ணாயிரம் பஸ்சில் சுற்றிப்பார்த்தபோது…பாதிபேர் பலாபழ சுளைகளை ருசித்து கொண்டிருந்தார்கள்.அதை பார்த்த கண்ணாயிரத்துக்கு உதட்டில் எச்சில் ஊற…பூங்கொடி எனக்கு ..பலாப்பழம் என்று கேட்க…அவர் கோபத்தில்…ம்..ஏற்கனவே சாப்பிட்ட காந்தா பிரியாணியே..இன்னும் சரியா வெளியேறல…அதுக்குள்ள…பலாப்பழமா…முடியாது..
உங்களுக்காக..சோடாவாங்கிவச்சிருக்கேன் குடிங்க…என்றவாறு பையில்வைத்திருந்த சோடாவை எடுத்து கொடுத்தார்.

அதைபார்த்த கண்ணாயிரம்…ம்..சோடா குடிக்கணூமா…சோடா குடிச்சிட்டு பலாப்பழம் சாப்பிடட்டுமா…என்று கெஞ்ச…பூங்கொடியோ..ம் எனக்கு மட்டும்தான் பத்து சுளைவாங்கி மறைச்சிவச்சிருக்கேன்….உங்களுக்கு தரமாட்டேன் என்க கண்ணாயிரம் சோடாபாட்டிலுடன் கவலையாக இருந்தார். அப்போது பயில்வான் வந்து பஸ்சில் ஏறியபடி எல்லோரும் வந்தாச்சா…பிறகு அவர் வரல…இவர்வரலன்னு சொல்லக்கூடாது என்று சொல்லியபடி..பஸ் இருக்கைகளை சரிபார்த்தார். எல்லோரும் வந்தது தெரிய..சரி..சரி..எல்லோரும் வந்தாச்சு..பஸ்புறப்படலாம் என்று சொல்ல…பஸ் மெல்ல புறப்பட அப்போது ஓரு பிச்சைக்காரன் ஓடிவந்து…அம்மா..சாப்பிட்டு நாலுநாளாச்சும்மா…ஏதாவதுஉதவி செய்யுங்க என்று கண்ணீர்வடிக்க..பஸ்சிலிருந்து எந்த உதவிக்கரங்களும் நீளாத நிலையில்…சுடிதார்சுதா தான்ஏலம் எடுத்த..காந்தாபிரியிணி பொட்டலத்தை அந்த பிச்சைக்காரனின் கையில் கொடுக்க. அவன் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அதை பார்த்ததும் கண்ணாயிரம் அதிர்ச்சியுடன்…நானேபடாதபாடுபட்டேன்…பிச்சைக்காரன் என்ன ஆவானோ…அவன்வயிறு ஒருவேளை தாங்குமோ…என்னமோ என்றபடி வயிற்றை தடவினார்.
பூங்கொடி கோபத்தில்…ஏங்க…காந்தாபிரியாணின்னு பீத்தினிய…பாருங்க…சுடிதார் சுதா ஏலம் எடுத்து பிச்சைகாகாரனுக்கு கொடுத்திட்டா…அவமானம்…அவமானம் என்று பற்களை கடிக்க கண்ணாயிரம்..அதுக்கு நான் என்ன செய்வேன் என்று பரிதாபமாக கேட்க…எல்லாம் நீங்க பாத்ரூம் போயிட்டு வந்ததுதான் பிரச்சினை…அந்த லெக்பீஸ் சரியாக வேகலைன்னா..தீங்காம இருந்து தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே..அதை விழுங்கி தொலைச்சிட்டு…பாத்ரூமுக்கு ஓடி..எல்லாரும் ஏளனமா சிரிக்க…அய்யய்ய..என்று சீறினார்.
இதை பார்த்த கண்ணாயிரம்…அடடா இங்கே இருந்தாசரிப்பட்டுவராது என்றபடி நைசாக ஏழுந்து பயில்வான்பக்கம் போய் உட்கார்ந்தார்…ஆ..வாங்க…காந்தாபிரியாணி படாதபாடு படுத்திட்டுபோல…வெளியூருக்குபோனா கண்டகழுதையையும் சாப்பிடக்கூடாது என்க..கண்ணாயிரம்
அதிர்ச்சி அடைந்து ஏங்க…நான்சாப்பிட்டது லெக்பீஸ்…அது சிக்கன் லெக்பீஸ்…நீங்க வேற நான் கழுதை கிழுதையை சாப்பிட்டதா சொல்லுறிய…ஊருல அப்படியே பரவிடும்..அப்புறம் கழுதை தின்னான்…கழுதை தின்னான்னு சொல்வாங்க என்று கண்களை கசக்க….பயில்வான் உடனே…சும்மா ஒரு பேச்சுக்கு கழுதைன்னு சொன்னேன்..அதை பெருசா எடுத்துக்கிட்டு..கோபப்படுறிய..கழுதை கறிய யாராலும் சாப்பிட முடியுமா…சாப்பிட்டா கழுதை மாதிரி கத்துவாங்கன்னு சொல்வாங்க..என்று எடுத்துவிட..கண்ணாயிரமோ…அது எப்படிங்க..சரியா இருக்கும்…கழுதை சாப்பிட்டா..கழுதை மாதிரி எப்படி கத்துவாங்க…நான் கோழிபிரியாணி சாப்பிட்டேன்..அதுக்காக கோழிமாதிரியா கூவுறன்…மனுசன் போலத்தானே பேசுறன் என்க..பயில்வான் அவரை சமாதானப்படுத்தினார்.
இல்லப்பா..காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்காகுரல்வருமுன்னு ஒருபடத்திலேவருமுல்ல…அதான் நானும் கழுதையை சாப்பிட்டா..கழுதைமாதிரி கத்துவாங்கன்னு சொன்னேன்..என்றார். கண்ணாயிரமோ சமாதானமாகாமல்…ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க கழுதைன்னு சொன்னது தப்புதான் என்று சத்தமாக சொல்ல அதை கேட்ட…பூங்கொடி..ஏங்க..கழுதை கழுதைன்னு…சொல்லுறீய..என்ன விசயம் என்று கேட்க கண்ணாயிரமோ…கழுதை கிழுதையெல்லாம் ஒண்ணுமில்ல…நீ பேசாம இரு என்று பூங்கொடியை பார்த்து கத்த அவரோ…ஏங்க…நான்என்ன சொல்லிப்புட்டேன்..இப்படி கழுதைமாதிரி கத்துறீங்க…என்று கேட்க..கண்ணாயிரத்துக்கோ தன் குரல்மேலே சந்தேகம் வந்துவிட்டது..பயில்வானை பார்த்து..ஏங்க…நான் பேசுறது மனுசன்மாதிரி இருக்கா..கழுதை கத்துறமாதிரி இருக்கா..சொல்லுங்க என்க…பயில்வானோ…இல்லை…இல்லை..மனுசன் கத்துறமாதிரிதான் இருக்கு என்றார். கண்ணாயிரம் உடனே பூங்கொடியிடம்…ஏய்..நான் நான் மனுசன்மாதிரிதான் பேசுறன்..பிறகு ஏப்படி கழுதைமாதிரி கத்துறன்னு சொல்லலாம் கழுதை எப்படி கத்துமுன்னு தெரியுமா…ஹாஹா..காள்..காள் காள் காள்.காள் என்று கத்தும். இதுதான் கழுதை குரல்…நான் பேசுனது கழுதைமாதிரியா இருந்துச்சு..சொல்லு என்றார்.
.ஓரு பேச்சுக்கு சொன்னேன் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் கொஞ்சம் அமைதியாக…துபாய்க்காரரோ இந்த சத்தத்தை கேட்டு என்ன கண்ணாயிரம் கழுதைமாதிரி கத்தினாரு..என்று கேட்க…கண்ணாயிரம் உஷ்ணமானார். கழுதை எப்படி கத்துமுன்னு சொல்லிக்காட்டினேன்…மற்றபடி வேற ஒண்ணுமில்ல என்க துபாய்க்காரரோ…நான்என்னமோ..காந்தாபிரியாணித்தான் கழுதைபிரியாணியாகிட்டோன்னு நினைச்சேன் என்று வதந்தியை கிழப்ப…அங்கிருந்தவர்கள்…என்ன கண்ணாயிரம் சாப்பிட்டது கழுதைபிரியாணியா என்று வாயைபிளக்க…கண்ணாயிரம் எழுந்து ..மக்களே நான் சாப்பிட்டது சிக்கன்பிரியாணிதான். சாட்சிக்கு என்மனைவி இருக்கா..தப்பா நினைக்காதீங்க…ஊருல போயி கண்ணாயிரம் கழுதைபிரியாணி சாப்பிட்டான்னு சொல்லாதீங்க..வதந்தியை பரப்பாதீங்க.நன்றி என்று சொல்லிவிட்டு சோடாவை திறந்து குடித்தார்.
இதைபார்த்தவர்கள்…கழுதை கறி சாப்பிட்டா..தாகம் அதிகம் வரும் என்று ஒருவர் சொல்ல..கண்ணாயிரம் அவர்மீது பாய ஓரே பரப்பானது.


வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.