May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 19,673 பேராக குறைந்தது

1 min read

Daily corona cases in India reduced to 19,673

31.7.2022
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரு நாளில் 19 ஆயிரத்து 673 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை பாதிப்பான 20 ஆயிரத்து 409 மற்றும் இன்றைய பாதிப்பான 20 ஆயிரத்து 408-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 49 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

39 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 204 கோடியே 25 லட்சத்து 69 ஆயிரத்து 509 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.