June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் நினைவு சின்னங்கள், சுற்றுலா தளங்களை பார்வையிட 15-ந்தேதி வரை இலவச அனுமதி

1 min read

Free entry till 15th to visit monuments, tourist sites across the country

3.78.2022
நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட 5-ந் தேதி முதல் 15ந் தேதி வரை இலவச அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலவச அனுமதி

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *