June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டின் பாரம்பரிய 9 வகை தானியங்களை பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min read

M. K. Stalin presented the traditional 9 types of grains of Tamil Nadu to Prime Minister Modi

17.8.2022
தமிழ்நாட்டின் பாரம்பரிய 9 வகை தானியங்களை பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அங்கிருந்து மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்றார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழஙினார். நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.

9 வகை தானியங்கள்

இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய 9 தானிய வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் தானியங்கள் என்ற பெயரில் மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்காரி, சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்களை நினைவு பரிசாக அளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *